அண்டில் காலடிவைக்கிறது.
இந்நிலையில் ‘தமிழகத்தைப் புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம்’ என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழுப் பலம், மொத்த சொத்து எல்லாமே மக்கள்தான்.
எனவே, வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லில் இன்றி, தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் காலடிவைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.