எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும் என என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக பொதுப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டுள்ளமை குறித்து ருவிற்றரில் கண்டனம் தெரிவித்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோருக்கு எதிராகக் கொடூரமான பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஜனநாயகத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைத்து வைத்திருப்பது மோசமான அருவருப்பான செயல். அநியாயமான சட்டங்கள் செயல்படுத்தும்போது அநியாயமான சட்டங்கள் அமுல்படுத்தும்போது அமைதியாக எதிர்ப்புத் தெரிவிப்பதைவிட மக்களால் என்ன செய்துவிட முடியும்?
போராட்டங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு இட்டுச் செல்லும், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு கண்டிப்பாகப் பணிந்து நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உணர்ச்சிமிகு உதாரண மனிதர்களையும், வரலாற்றையும் அவர் மறந்துவிட்டார். அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும். இதுதான் சத்தியாகிரஹம் என தெரிவித்துள்ளார்.