LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 7, 2020

உரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை அபிவிருத்தியின் பயன் வந்து சேராது – சரவணபவன்!

உரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு
அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின் அவரது மூன்று முக்கிய உரைகளில் அவர் சிறுபான்மை மக்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக செயற்படப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் முன்னுரிமை கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அபிவிருத்திச் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினையை தீர்க்கலாம் என அவர் நினைக்கிறார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை, அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விவகாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.

எல்லோருமே பயங்கரவாதத்தை பற்றி பேசுகின்றனர் எனினும் பயங்கரவாதத்திற்கு மூல காரணம் என்ன என்பது பற்றி எவரும் பேசுவதில்லை.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும். 22 ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்.

தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கும் ஆதரவு சர்வதேசத்திற்கு தமிழ் மக்களின் பிரச்சினையை தெளிவுபடுத்தும்.

அரசாங்கம் பல விடயங்களில் சிறுபான்மை மக்களை புறக்கணித்து இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துகிறது அந்த நிலையில் மாற்றம் அவசியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7