ஷப்தீன் ஆயிஷாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளது.
வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய சதோச பரிவர்த்தனைகள் குறித்த பில்லியன் ரூபாய் மதிப்புமிக்க தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கடந்த 7 ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.
குறித்த ஆவணங்களில் 2016-2017 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரிசி இறக்குமதி, ஜெனரேட்டர்களின் கொள்முதல், பல்வேறு நபர்களின் பெயரில் வாங்கிய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை உள்ளடக்கிய ஏராளமான நில பத்திரங்கள் பற்றிய விவரங்கள் இருந்ததாகவும் சி.ஐ.டி. அறிவித்திருந்தது.
அத்தோடு கொழும்பில் உள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வீட்டில் இருந்து இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சி.ஐ.டி. தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ரிஷாட்டின் மனைவி இன்று இரண்டாவது நாளாகவும் வாக்குமூலத்தை பதிவு செய்யச் சென்றிருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.