LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 26, 2020

மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் மாஸ்டர்
படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும் விஜய் சேதுபதி மாணவர்களுக்கு போதைபொருட்கள் விற்கும் தாதாவாகவும் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பின்னர், விஜய் நடிக்கும் 65ஆவது படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மகிழ் திருமேனி, வெற்றி மாறன், பாண்டிராஜ், சுதா கொங்கரா ஆகியோரிடம் விஜய் கதை கேட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூறிய மற்றொரு கதையும் விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் அடுத்து அந்த படத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7