LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 26, 2020

கொரோனா – உண்மைத் தகவல்களை ஈரான் மறைப்பதாக குற்றச்சாட்டு!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை ஈரானில் 95 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, ஈரானில் பாதிக்கப்பட்டோர் என அந்நாட்டு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதென பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில் இவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது இருமியபடியே இருந்தார். வியர்வையில் நனைந்தபடி இருந்த அவரை, மருத்துவக்குழுவினர் பரிசோதித்தபோது, நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ள பிரதான மூன்று இடங்களில் ஒன்றாக ஈரான் மாறியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸினால் ஏற்பட்ட உண்மையான பாதிப்பு விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7