பேரில் சீன எழுத்தாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிறந்த ஸ்வீடன் குடியுரிமையினைக் கொண்ட குவின் மின்ஹைய் என்ற எழுத்தாளுக்கே 10 ஆண்டு சிறைத் தண்டனையை சீனா விதித்துள்ளது.
ஸ்வீடன் – சீனா இடையேயான உளவு ரகசியத்தை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குவின் மின்ஹைய் கைது செய்யப்பட்டுள்ளமையானது சீன அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கைகளில் ஒன்று என அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஹொங் கொங்கில் இருந்துகொண்டு சீன அரசியலையும், சீன அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தவர்களில் எழுத்தாளர் குவின் மின்ஹையும் ஒருவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.