இந்தியாவுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் நாளாந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
இதுவரை காலமும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே விமான சேவைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று முதல் 7 நாட்களும் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
இங்கு புதிதாக அமைக்கப்பட்ட விமான நிலையத்தின் விமான சேவைகள், வர்த்தக்கர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் நன்மையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்நிலையில் அதன் சேவைகள் இன்னும் அதிகரிக்கப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் பல வழிகளிலும் நன்மையை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.