வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ஐ.நா. மாநாட்டில் காணொலிகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டின் வனப்பரப்பு 21. 67 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாதுகாக்கப்பட்ட வனங்களின் எண்ணிக்கை 745 ல் இருந்து 870 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர் இமய மலையின் உயரமான சிகரங்களில் வசிக்கும் பனிச் சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக சிறப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில் 450 மெகாவாட் மறுசுழற்சி மின் உற்பத்தி செய்யப்பட்டு மின் வாகனங்கள், ஸ்மார்ட் சிட்டிகள், நீர்வள பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.