 டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு  பொலிஸாரின்
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு  பொலிஸாரின்கவனயீனமே காரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்தவும் வன்முறையாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்யக் கோரியும் முன்னாள் தகவல் ஆணையர் வஜஹாத் ஹபிபுல்லா உள்ளிட்ட சிலர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பொலிஸாரின் மெத்தனம்தான் வன்முறைக்கு காரணம் என தெரிவித்த நீதிபதிகள், பொலிஸார் சரியாக செயல்பட்டிருந்தால், வன்முறையை தவிர்த்திருக்கலாம் என்றும் டெல்லியில் வடகிழக்கு பகுதியில் நடந்தது எல்லாம் துரதிர்ஷ்டவசமானது எனவும் கூறினர்.
இதேவேளை, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்துபவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த போராட்டம் தொடர்பான தேவையில்லாத அம்சங்களை விசாரிக்க போவதில்லை. பொது சாலைகளில் காலவரையின்றி போராட்டம் நடத்தக்கூடாதுஎனக்கூறி, வழக்கை மார்ச் 23க்கு ஒத்திவைத்துள்ளது.
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
