அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் இந்த வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.
கற்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை வீசியும் துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வன்முறை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் பொதுமக்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு நடத்தி அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து்ளளார்.