விபத்து தொடர்பாக 60 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டன் பகுதியிலுள்ள 1031 ஃபிரான்சஸ் செயின்ட் வீதியிலுள்ள சொந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை காலை 9:47 மணியளவில், குறித்த வீட்டில் தீ பரவியதாக லண்டன் தீயணைப்புத் துறை படைப்பிரிவுக்கு அவசர அழைப்பு வந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒருநாள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சந்தேகத்திற்குரியதாக விசாரிக்கப்பட்ட இந்த தீவிபத்தில், 400,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.