பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று 406 ஆக இருந்தது என அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,497ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் 29பேர் இறந்துள்ளனர் என்றும் இது ஜனவரி 28இற்குப் பின்னர் மிகக் குறைந்த தினசரி வீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எணிக்கை 52 என்றும் தற்போது மொத்தமாக 2,744 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வைரஸ் பரவிய முக்கிய நகரமான மத்திய சீன மாகாணமான ஹூபேயில் நேற்று புதிதாக 409 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 26 பேர் இறந்துள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பீஜிங்கில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது நேற்று பூஜ்ஜியத்தில் இருந்தது என்றும் பீஜிங் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் பாங் ஜிங்குவோ இன்று வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.