 முல்லைதீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
முல்லைதீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்டமுறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஏ-9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
