உயிருடன் புதைத்து விடுவேன் என பா.ஜ.க.பிரமுகர் ரகுராஜ் சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம்- அலிகாரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது அதில் கலந்துகொண்டு பேசிய ரகுராஜ் சிங், மேற்கண்டவாறு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன்.
இருவரும் உங்கள் கோஷத்தை கண்டு கலங்குபவர்கள் அல்ல. அவர்கள் நாட்டை ஆள்பவர்கள். இதேபோன்று தான் ஆள்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பா.ஜ.க. தற்போது அதற்கு விளக்கம் அளித்தது. ரகுராஜ் சிங், அமைச்சரோ சட்டமன்ற உறுப்பினரோ அல்ல என்று பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்தார்.
ஆனால், உத்தரபிரதேச தொழிலாளர் துறையின் ஒரு பிரிவில் ஆலோசகராக ரகுராஜ் சிங் பொறுப்பு வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.