புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டுநாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) காலை ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை புதுவருட சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் இந்த விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இந்த வழிபாடுகளின்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் புதிய அரசாங்கத்திற்கும் நல்லாசிவேண்டியும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் புதுவருடத்திற்கான ஆசியையும் பெற்றுக்கொண்டனர்.





