திரையை அலங்கரித்திருந்தன.
அந்தவகையில், சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய் நடித்த பிகில், அஜீத் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், சூர்யா நடித்த காப்பான், கார்த்தி நடித்த கைதி, விஷால் நடித்த ஆக்ஷன், விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன், தனுஷ் நடித்த அசுரன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் கடந்த ஆண்டு 209 படங்கள் வெளியாகி கோலிவுட்டின் செழிப்பை காட்டினாலும் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்கிய மகேந்திரன், 200 படங்கள் நடித்து 40 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்த நடிகை விஜயநிர்மலா, நடிகர்கள் கிரேஸி மோகன், ராஜசேகர், பாலாசிங் கொல்லுப்புடி மாமருதிராவ், காமெடி டைப்பிஸ்ட் கோபு, கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் இழப்பு சோகத்தில் ஆழ்த்தியது.
அத்துடன், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், நடிகைகள் சாயிஷா, ரிச்சா கங்கோபாத் யாய், மதுமிதா போன்ற நட்சத்திரங்கள் சிலர் காதல் திருமணம் செய்து கொண்டது இனிமையான நிகழ்வாக அமைந்தது.