சம்பள உயர்வினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்தவகையில் மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் தோட்டத்தொழிலார்கள் நாளாந்தம் 1000 ரூபையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் ஆதவன் செய்தி சேவைக்கு கிடைத்துள்ளன.
இதேவேளை தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்தோடு தேயிலைத் தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு உரமானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்குகின்றன.
எனவே இவை தோட்ட நிறுவங்களுக்கு மட்டுமே கிடைக்காமல் அவற்றினை தொழிலார்களுக்கும் கிடைக்கச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை இன்று காலை தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாயினை ஐந்து வருடங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கிருந்ததாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.