LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 10, 2019

பாலியல் லஞ்சம் கோரும் அரச அதிகாரிகள் – ட்ரான்ஸ்பரன்ஸி அமைப்பு சுட்டிக்காட்டு

லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 9 மாகாணங்களையும்
ஒருங்கிணைத்து 18 முதல் 80 வயது வரையான 1300 பிரஜைகளிடம் ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரர்நாஷனல் அமைப்பினால் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரர்நாஷனல் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த அமைப்பு, நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும்போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் லஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் ட்ரான்ஸ்பரன்ஸி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை அவர்களிடம் நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றில் எந்த முக்கிய நிறுவனத்தை அதிகம் நம்புகிறார்கள் என்று கேட்டபோது, பெரும்பான்மையான பொதுமக்கள் 73% உடன் நீதித்துறையைத் தேர்ந்தெடுத்தனர். அத்தோடு அரசாங்கம் மீது 47% நம்பிக்கையையும், பொலிஸார் மீது 57 விகிதமானவர்களும் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு இருப்பதை 86% பொதுமக்கள் அறிந்திருந்தபோதும் இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாட்டினை வழங்குவதற்கான ஒரு பொறிமுறை 72 விகிதமானவர்களுக்குதெரியாது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7