மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறினார்.
இதேவேளை சுவிஸ் தூதரக விடயத்தில் இரண்டு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அதற்கமைய செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் குழப்பங்களையோ முரண்பாடுகளையோ ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.





