(ஜெ.ஜெய்ஷிகன்)
2019ஆம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் கணேசன் சஞ்ஜைகுமார் மாவட்டத்தில் நான்காம் நிலையைப் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் திறப்பர் சின்னத்தம்பியின் பேரனும் திரு.திருமதி.கணேசன் விஜயலட்சுமி தம்பதிகளின் கனிஸ்ட்ட புதல்வனான இவரின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. தாய் குடும்பப் பெண்ணாக இருந்து மகனின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தவரும் விஜயலட்சுமி அவர்களே.
குறித்த விடயம் தொடர்பில் கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது சஞ்ஜைகுமார்; கல்லூரியின் அனைத்து செயற்பாடுகளிலும் திறமைகாட்டி முன்மாதிரியாக செயற்பட்டு வருபவர். இவர் கணித வினாடி வினா, சமூக விஞ்ஞான போட்டிகள், கணித ஒலிம்பியாட் போட்டிகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருபவர். 2010இல் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 161 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்தவர். 2016இல் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி 9யு சித்திகளைப் பெற்று குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தான் சார்ந்த மண் மற்றும் கல்லூரியின் நற்பெயரையும் போற்றி, ஆசிரியர்களின் நல் அபிமானத்தையும் பெற்ற மாணவராக மிளிர்ந்து வருகின்றார். இவரது திறமைகளை நான் வெகுவாகப் பாராட்டுவதோடு, சிறந்த எதிர்காலம் அமையவும் பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்
வுர்யவவரபெயட.உழஅ தளம் சார்பாக குறித்த மாணவரிடம் நேரடியாக கலந்துரையாடினேன் விபரம் வருமாறு,
மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தருணத்தை எப்படி உணருகின்றீர்கள்?
கணேசன் சஞ்ஜைகுமார் குறிப்பிடுகையில் எனது குடும்பத்தாருக்கும் தாய், தந்தை எனது கிராமம் மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் கனவை நினைவாக்கி விட்டேன் என்ற சந்தோசமும், மகிழ்ச்சியும் அந்த தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. எல்லோருக்கும் பெருமை சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். என் தோளோடு தோள் நின்ற பெற்றோருக்கும், என்னைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும், எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையில் வெற்றிபெற என்ன ஆலோசனை சொல்ல விரும்புகின்றீர்கள்?
எப்பொழுதுமே வகுப்பறையில் முதல் பெஞ்சிலேயே இருப்பேன். ஆசிரியர் சொல்வதை அந்தப் பாடவேளையிலேயே கிரகித்துக் கொள்வதோடு, சந்தேகங்களை குறித்த நேரத்திலேயே வினவி நிவர்த்தி செய்து கொள்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது. தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி உங்கள் காலடியில் என்றார்.