கனத்த மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இதுவரை 25 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடியான குறித்த குளத்திற்கான நீர் வருகை அதிகரித்து காணப்படுவதாக பொறியியலாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடியாவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 6.5 அடியாகவும் புது முறிப்பு குளத்தின் நீர்மட்டம் 13 அடியாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடமுருட்டி குளம் (8 அடி), பிரமந்தனாறுகுளம் (12 அடி), வன்னேரிக்குளம் (09.06 அடி) ஆகியன தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி 10.06 அடிகொண்ட கனகாம்பிகைக்குளம் 10.1 அடியாகவும் 24 அடிகொண்ட கல்மடுகுளம் 23.2 அடியாகவும் அதிகரித்துள்ளது. இரு குளங்களும் இன்று மாலை அல்லது இரவு வான்பாய ஆரம்பிக்கலாம் என நீர்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் நீர் நிலைகளில் நீராட செல்லுதல் மற்றும் சிறார்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.