வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.
இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘I want a Girl’ என்ற பாடலின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடலசிரியர் கு.கார்த்திக் எழுதியுள்ளார்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ள நிலையில், இப்படம் டிசம்பர் 6 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் நகைச்சுவை கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.