நெடுஞ்சாலையொன்றை போக்குவரத்து அமைச்சகம் மூடியுள்ளது.
அப்பகுதியில் ஏற்பட்ட பாறை சரிவே இதற்கு காரணம் எனவும், இந்த வீதிப் பகுதி மூடப்படுவதால் மாற்று வழிப் பாதையை பயன்படுத்துமாறும் போக்குவரத்து அமைச்சகம் கோரியுள்ளது.
நெடுஞ்சாலை 93, கிரான்ப்ரூக்கின் வடக்கே உள்ள இந்த வீதிப் பகுதியே நேற்று (வியாழக்கிழமை) மூடப்பட்டது.
டச்சு க்ரீக் ஹூடூஸ் என்று அழைக்கப்படும் கிரான்ப்ரூக், பி.சி.க்கு வடக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள நெடுஞ்சாலை தொடர்பான மதீப்பீடு தொடர்கின்றது.
இப்பகுதியின் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்க புவி தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டதாக, வீதி பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.