
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக பிரபல தொழிலதிபரும், அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவியேற்றுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் நாட்டின் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் முன்னர் நியமிக்கப்பட்டனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனத்தில் இழுபறி காணப்பட்ட நிலையில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் நியமனம் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.
