அடைய நினைக்கும் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதரன் மேலும் கூறுகையில், “இன்று எல்லோரிடம் பயத்தை ஏற்படுத்தும் விதமான பேச்சுக்களே முன்வைக்கப்படுகின்றன.
அதாவது புதிய ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம், நமக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகிறார் போன்ற பயங்களானது இன்று நேற்று அல்லாது பல ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்தது.
கைது செய்யப்பட்டதும், காணாமலாக்கப்பட்டதும் என இந்த தியாயங்களுக்கு மத்தியில் துணிச்சல் மிக்கவர்களாக இம்மண்ணில் எம்மால் இருக்க முடிந்தது. ஆகவே வரலாறுகள் எப்போதும் மாற்றங்களைக் கொண்டு வரும்.
2007இல் எங்களுடைய தேசிய விடுதலைப் போராட்டம் இல்லாமல் போய் நாங்கள் இன்னொரு அந்நிய இராணுவத்தின் பிடிக்குள் அடங்கி இருப்போம், சிறை வைக்கப்படுவோம் என்ற எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை.
ஆனால் அதேநேரம் 2015 ஆம் ஆண்டு அரசியலில் வந்தவர்கள் அந்த ஆதிக்க வெறியோடு வந்தவர்களின் ஊடாக மாற்றம் வரும் என எண்ணியது குறைவு. எனவே எம்மால் முடியுமென்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.