
இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தடம் பட இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
