‘இந்தியன் ‘2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலானது.
இந்நிலையில் குறித்த போஸ்டர் படக்குழு வெளியிட்ட போஸ்டர் இல்லை என்று லைக்கா நிறுவனம் பதிவு செய்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.
அத்துடன் இந்தியன் படத்தில் இடம்பெற்ற சேனாபதி தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் முன்பு இப்படத்தின் முதல் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தில் பலத்த வரவேற்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.