LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 2, 2019

கனடா கின்ஸ்டன் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!

கனடாவின் கிங்ஸ்டனுக்கு கிழக்கே 401 ஆவது
நெடுஞ்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பல வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

15 வது நெடுஞ்சாலை மற்றும் மொன்றியல் வீதிக்கு இடையில் பிற்பகல் 2:30 அளவில் நெடுஞ்சாலை 401 இன் மேற்குப் பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 முதல் 40 வாகனங்கள் மற்றும் உழவு இயந்திர டிரெய்லர்கள் மோதிக் கொண்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த துணை மருத்துவர்கள் வாகன விபத்தில் காயமடைந்த 20 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்தவர்களில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று திரும்பினார். விபத்தில் காயமடைந்த ஏனைய தரப்பினர் கிங்ஸ்டனில் உள்ள ஒரு வெப்பமயமாதல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலை 401 இன் மேற்குப் பாதைகள் அனைத்தும் ஜாய்ஸ்வில்லி வீதிக்கும் நெடுஞ்சாலை 15 க்கும் இடைப்பட்ட பகுதியில் மூடப்பட்டுள்ளன.

அதனையும் மீறி நெடுஞ்சாலையில் தரிக்கப்படும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் என்று OPP தெரிவித்துள்ளது. வாகன சாரதிகள் தங்கள் விபத்துக்குள்ளான வாகனங்கள் எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை இன்றைய தினம் OPP இன் Frontenac Detachment டிடம் பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

விபத்து நடத்த நெடுஞ்சாலையை இன்று திறக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகலில் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவை ஏற்படுத்திய புயல் காரணமாக கிங்ஸ்டன் பகுதி குளிர்கால வானிலை எச்சரிக்கைக்கு உட்பட்டிருந்தது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7