அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சூரிய கதிரிலுள்ள புற ஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, விற்றமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது.
குடலில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு, இந்த விற்றமின் – டி மிகவும் அவசியமாகின்றது.
அந்த வகையில் குடலின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக, குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் பல்லுயிர் பெருக்கத் தன்மைக்கும் சூரிய ஒளி மிகவும் முக்கியம்.
இதனை மனிதச் சோதனைகள் மூலம் கனடா விஞ்ஞானிகள் நிறுவியிருப்பதாக, ‘பிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி’ இதழ் தெரிவித்துள்ளது.