(ஜெ.ஜெய்ஷிகன்)

பின்வருவோர் நிருவாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக கட்டுகஸ்தோட்ட மஹிந்தாலங்கார தேரர் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக மௌலவி ஏ.எல்.முஸ்தபா அவர்களும் செயலாளராக வணபிதா க.சுனில் அவர்களும் உப செயலாளராக வணபிதா எஸ். ஏசாயா அவர்களும் பொருளாளராக க.மகேந்திரன் குருக்கள் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிருவாக உறுப்பினர்களாக வணபிதா ந.சிறிகாந், க.அதுல தம்மாலங்கார தேரர், மௌலவி எம்.எம்.முஹமட் தாஹிர் மற்றும் மௌலவி.ஏ.பி.எம்.முஸ்த்தபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் எதிர்வரும் காலங்களில் கல்குடா தொகுயில் வாழும் மக்களின், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஒருமைப்பாடு, ஐக்கியம் சம்பந்தமாக பணியாற்றுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
