LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 20, 2019

முதல் அரசமுறைப் பயணமாக இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி கோட்டா!

இலங்கை சோஷலிச
குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

புது டெல்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்த அவர், உடனடியாக புதிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியைத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், கோட்டாபய ராஜபக்ஷவை அரச முறைப் பயணமாக இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார்.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7