இறுதியில் ஏற்பட்ட மசகு எண்ணெய்க் கசிவு, சீரமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டகோட்டாவில் கடந்த ஒக்ரோபர் மாதம் 29ஆம் திகதி, 1.4 மில்லியன் லிட்டர் (9,120 பீப்பாய்கள்) எண்ணெய் கொட்டப்பட்டதை அடுத்து கீஸ்ரோன் குழாய் மூடப்பட்டது.
இதனையடுத்து எண்ணெய்க் கசிவினை சீரமைக்கும் பணியில், டி.சி எனர்ஜி முன்னெடுத்து வந்தது. இந்த நிலையில் இப்பணி சீராமைக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழமைக்குத் திரும்பியது.
தற்போது மசகு எண்ணெய், குறைந்த அழுத்தத்தில் இயக்கப்படுமெனவும், இது படிப்படியாக கணினி வழியாக அதிகரிக்கப்படுமென கல்கரியைத் தளமாகக் கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கசிவு கடந்த தசாப்தத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுகளில் ஒன்றாகும் எனவும், கீஸ்ரோனின் ஏற்பட்ட மிகப்பெரிய கசிவு எனவும் விபரிக்கப்பட்டுள்ளது.
ஹார்ட்டிஸ்டி, ஆல்டா, அமெரிக்க வளைகுடா கடற்கரைக்கு ஒரு நாளைக்கு சுமார் 93.8 மில்லியன் லிட்டர் வழங்கும் மசகு எண்ணெய்க் குழாய்த் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.