LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 12, 2019

ஜம்மு-காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு கருதி
நிறுத்தப்பட்ட ரயில் சேவை 3 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஸ்ரீநகர் – பாரமுல்லா- ஸ்ரீநகர் இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்வே பொலிஸார் உறுதி அளித்ததன் பின்னர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் வரும் 16ஆம் திகதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, 17 ஆம் திகதி ரயில் சேவை ஆரம்பமாகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஒகஸ்டு 5 ஆம் திகதி  மத்திய அரசு இரத்து செய்தது. அதேநேரம் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி காஷ்மீரில் ஒகஸ்டு 3 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

சில இடங்களில் நிலைமை சீரானதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வந்தது.

தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7