வலுவாக வளர்ச்சியடைந்து வருவது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு என் மீது ஏற்பட்டுள்ள பயமும், வெறுப்புமே சிறந்த சாட்சியென ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் பகுதியில், நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “மேற்கு வங்கத்தில் ஹிந்துத் தீவிரவாதிகள் போன்று முஸ்லிம் தீவிரவாதம் பெருகி வருகிறது.
இதை இங்கு வளர்ப்பதற்காக பா.ஜ.க.விடம் பணம் பெற்றுக் கொண்டு ஒரு கட்சி செயற்பட்டு வருகிறது. அந்த கட்சி மேற்கு வங்கத்தைச் சேர்ந்ததல்ல. ஹைதராபாத்தை மையமாகக் கொண்டது” என ஓவைஸியையும் அவரது கட்சியையும் மறைமுகமாக சாடினார்.
இந்நிலையில், மம்தாவின் கருத்துக்கு பதிலடி வழங்கும் வகையிலேயே ஓவைஸி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “என் மீது தேவையற்ற அவதூறு பரப்புவதன் ஊடாக மேற்கு வங்கத்திலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் இங்கு எனது கட்சி வலுப்பெற்றிருப்பதை உணர்த்தியுள்ளீர்கள்.
என் மீதும், எனது கட்சியின் மீதும் ஏற்பட்டுள்ள பயம் மற்றும் வெறுப்பின் காரணமாகவே இதுபோன்ற அவதூறு கருத்தை மம்தா பரப்பி வருகிறார். இதுவே மேற்கு வங்கத்தில் எனது வளர்ச்சிக்கு சாட்சி” என குறிப்பிட்டுள்ளார்.