![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwMMbAJrCq1fybtmIdzLzrw9MiNOAmQLpw7tFTaQz6Vox6Rxf54cWxjOLzzpWGiBxqejwyWZgxFnpar2JifU_Id_p8BXx9CXiJqQYvLfNXaPVwpcfcZfQrgAR1e2vshvVt09JOIwNm8S4/s320/thattungal.com.jpg)
காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அக்கறைப்பற்று, கண்ணகி கிராமம் கல் உடைக்கும் மலை அருகாமையில் இவரை சடலமாக பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கண்ணகி கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி தேவரூபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும், நேற்று இரவு கொலை நடந்ததாக சந்தேகிக்கும் அக்கரைப்பற்று பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)