ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆச்சிரமம் செயற்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் ஆச்சிரமத்திற்கு சொந்தமான அலுவலகங்களின் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் 94 கோடி ரூபாய் இந்திய பணம், 24 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்தநிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் வருமான வரித்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து கல்கி ஆச்சிரமத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்காரணமாக அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.