வாயிலாகவும் எம்மை விமர்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
ஐரோப்பிய தேர்தல் கண்காகணிப்பு குழுவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள முறைப்பாடானது நூறு வீதம் உண்மைக்குப்புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பூ.பிரசாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “ ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் பலவற்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட அவற்றின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை மிக மோசமாக சாடி வருகின்றனர்.
மேலும் முன்னாள் போராளிகளுடாக குழப்பத்தை ஏற்படுத்த முனைவதுடன் வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்கள் தங்களின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கோட்டாபயவை ஆதரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.