உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொலிஸாருக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு இந்த விடயம் தொடர்பாக இன்னும் இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக இன்று வெளிவந்திருக்கும் செய்தி, அ.தி.மு.க. அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் வெட்கம் ஏதுமின்றி முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸாருக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் செய்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி – ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையாக விசாரணை நடத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்