அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.சியாத் இன்று (சனிக்கிழமை) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள எம்.எஸ்.எம்.சியாத், “2015ம் ஆண்டு சஹ்ரானின் தம்பியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைச்சர் ஹக்கீமுடன் தானும் பார்வையிடுவது போன்ற புகைப்படமொன்று ஊடகங்களில் வெளி வந்தது.
இதன்போது நான் பொதுஜன பெரமுன ஆதரவாளராக அங்கு சஹ்ரானின் தம்பியை பார்வையிடச் சென்றதாக அமைச்சர் ஹக்கீம் தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருகின்றார்.
இவரது இந்தக் கருத்துக்கு எதிராகவே காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளேன்.
தற்போது நான் சார்ந்துள்ள பொதுஜன பெரமுன கட்சிக்கும் அமைச்சர் ஹக்கீம் என்னைக் காட்டி அபகீர்த்தியை ஏற்படுத்த முனைகின்றார். இதைக் கண்டித்தே நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக பதிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.