
முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கின் தென் பகுதியின் நஜஃப் நகரில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன்னால் நேற்றுமுந்தினம் (புதன்கிழமை) இரவு வன்முறை வெடித்தது.
இதில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரக அலுவலகக் கட்டடத்துக்குத் தீ வைத்தனர்.
இந்த வன்முறையில் சுமார் 47 பொலிஸார் காயமடைந்திருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நஜஃப் நகரில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக உள்ளதுடன் வன்முறையார் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
