கல்கரியைச் சேர்ந்த 60 வயதான அலென் பெர்டோமோ லொப்ஸ் என்பவருக்கு கடந்த ஒகஸ்ட் மாதம், 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாகாணத்தின் உயர் நீதிமன்றம் தனது தண்டனையை ரத்துச் செய்யவேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவரது தண்டனையை குறைக்க வேண்டும் என அலென் பெர்டோமோ லொப்ஸ் மேன்முறையீடு செய்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) அவர் இந்த மேல்முறையிடை தாக்கல் செய்தார்.
கல்கரியைச் சேர்ந்த 60 வயதான அலென் பெர்டோமோ லொப்ஸ் எனப்படும் குறித்த நபர், ஐந்து வயதான எமிலியோ பெர்டோமோ என்ற தனது பேரனை 2015ஆம் ஆண்டில் கொன்றதாக கடந்த மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்த வழக்கு விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், விசாரணையின் இறுதியில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஐந்து வயதான குறித்த சிறுவன் மெக்சிக்கோவில் வசித்துவந்த நிலையில், சிறுவன் கனடாவில் தாத்தாவுடன் வசிப்பது சிறந்தது என்று கருதிய சிறுவனின் தாயார், பாட்டியுடன் மகனை கனடாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கனடாவுக்கு வந்து சேர்ந்த ஐந்து மாதத்தில், தலையில் பலத்த அடி காயத்துடன் மூளையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார். சுய உணர்வற்ற நிலையில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி கல்கரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், கண் திறக்காமலேயே எட்டு நாட்களின் பின்னர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.