26ஆவது வீதி 100இன் 100 தொகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
27 வயதான ரியான் ஜோன் காட்ஸ்கே என்பவர் இந்த சம்பவத்தின் போது, காயத்திற்கு உள்ளானதாகவும், பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார், சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
மேலும், சிலருக்கு விசாரணைக்கு உதவக்கூடிய முக்கியமான தகவல்கள் அல்லது ஆதாரங்கள் இருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியவில்லை என கூறியுள்ள பொலிஸார், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.