காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இந்திய கிராமங்கள் மீதே இன்று (வெள்ளிக்கிழமை) சரமாரியாக குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் மேற்கு குப்வாராவில் உள்ள தும்னா மற்றும் ரிடி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பலரின் வீடுகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.
இதேவேளை, நேற்று குப்வாரா மாவட்டத்தின் டங்தார் துறையில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு முன்னதாக கடந்த 20ஆம் திகதி டங்தார் துறையில் பாகிஸ்தானால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் இருவரும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இதன்பின்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் கடும் பீரங்கித் தாக்குதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.