ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு என சுதந்திர கட்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) இடமபெற்ற நிகழ்வொன்றின் பின் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தனது சமுக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவிருந்தது, ஆனால் அது நேற்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டபோதும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.