எசெக்ஸில் லொறி கொள்கலனிலிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் கென்ற் பகுதியில் லொறி ஒன்றிலிருந்து ஒன்பது குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளனர்.M20 நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றை நேற்று பிற்பகல் 3.40 அளவில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அதனுள்ளிருந்து 9 குடியேறிகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஒன்பது பேரும் உள்துறை அமைச்சின் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





