LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, October 6, 2019

500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை!

பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

தான் 500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரித்தானியாவின் Telford பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது 40 வயதாகும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் “நான் என்னுடைய 11 வயதில் இருந்து 19 வயது வரை சுமார் 500 ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்குள்ளானேன்.

பள்ளி படித்து கொண்டிருந்த போது, துப்பாக்கி முனையால் மிரட்டப்பட்டு சிலரால் பாதிக்கப்பட்டேன். அதன் பின்னர் என்னுடைய 16 வயதில் ஒருவன் என்னை தூக்கிச் சென்று வாயை மூடி, மிரட்டி துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தான்.

இதனால் நான் அழுதேன், ஆனால் அவன் மிருகம் போன்று நடந்து கொண்டான். அதன் பின்னர் நான்கு வருடங்கள், என்னுடைய 19 வயதில் ஒருவனுடைய கட்டுபாட்டில் சிக்கிக் கொண்டேன். இதனால் அவன் மற்றும் நண்பர்களால் பல முறை இதில் சிக்கித் தவித்தேன்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் “இது குறித்து பொலிஸ் நிலையத்தில் நான் என்னுடைய 19 வயதில் முறைப்பாடு கொடுத்த போது, அவர்கள் என்னை விபச்சாரி என்று கூறினர். பாதிக்கப்பட்டவள் போன்று நடத்தவே இல்லை.

என் மீது தான் வழக்கு தொடர்ந்தனர். நான் அதற்கான அபராத தொகையை கட்டி அதன் பின்னர் வெளியில் வந்தேன். பல ஆண்கள் என்னை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிபர் தன்னுடைய வீட்டில் ஓவியம் ஒன்றை வரைந்து வைத்துள்ளார். அதில், அவர் தன்னுடைய 14 முதல் 16 வயதுடைய பள்ளி காலத்தில் படிப்பை தவறவிட்டதாகவும், அந்த கால கட்டத்தில் இரவு 10 பேர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதை விளக்கும் வகையிலும் வரைந்துள்ளார். ஆனால் அதை சாதரணமாக பார்த்தால் தெரியாது என்கிறார் ஜெனிபர்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த துயரம் எல்லாம் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் தற்கொலைக்கும் முயன்றேன். அதன் பின்னர் 1980களில் Shropshire நகரம் பக்கம் வந்தேன். அங்கும் சொல்ல முடியாத பல பிரச்சினைகளை சந்தித்தேன்.

என்னுடைய சிறு வயதில் தோழன் என்ற பெயரில் ஒருவரிடம் அறிமுகமானேன், அவர் அவருடைய உறவினர்களை அறிமுகம் செய்தார். அவர்களிடம் வலுக்கட்டாயமாக உறவு வைத்து கொள்ளும் படி வற்புறுத்தினார்.

இந்த குற்ற உணர்ச்சியால் நான் வீட்டை விட்டு வெளியேறி Shropshire பக்கம் வந்தேன். 1990களில் ஒரு சமூக சேவகி என்னை கண்டார். ஆனால் அவர் என்னிடம் கடந்த காலத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை, எனக்கு இப்போது 40 வயதாகிறது பிள்ளைகள் இருக்கின்றனர். வாழ்க்கை கடந்து சென்று கொண்டிருக்கிறது” என்று வேதனையுடன் கூறி முடித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7