இது ரோம பேரரசின் தொடர்ச்சியான பைஸாடீனிய மரபு (Byzantine-era church ) வழிவந்த ஒரு வீரருடையது என்று கூறப்படுகிறது.
ஜெருசலேம் நகரிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ள இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு நடத்திய தொடர் அகழ்வாராய்ச்சியில் சுமார் 6ஆம் நூற்றாண்டில் வீரமரணமடைந்த ஒருவரின் நினைவாக கட்டப்பட்ட அழகிய தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொசைக் கற்களைப் பயன்படுத்தி பறவைகள், பழங்கள் மற்றும் மரங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த அந்த ஆலயத்தினுள், வீரமரணமடைந்தவரின் சடலம் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வீரமரணமடைந்தவரின் விபரத்தை அறிய ஆராய்ச்சியாளர் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோம பேரர்சர் இந்த ஆலய விரிவாக்கத்திற்கு நிதியுதவி அளித்துள்ளதற்கான கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.