நாவலப்பிட்டி கெட்டபுலா புதுகாடு தோட்டப் பகுதியில் உள்ள லயன் குடியிருப்பில் இன்று (சனிக்கிழமை) தீ ஏற்பட்டுள்ளது.
பத்து குடியிருப்புகளை கொண்ட இந்த லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதோடு ஏனைய ஒன்பது குடியிருப்புகளுக்கும் தீ பரவாமல் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த குடியிருப்பில் தீ ஏற்பட்ட வீட்டிலிருந்த உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. மின் ஒழுக்கு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைக நாவலப்பிட்டி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.