LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, September 6, 2019

பெண்களுக்கு இலவச ரயில் பயண திட்டம் – உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள்
இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டால் அந்நிறுவனம் எப்படி இலாபத்தில் இயங்கும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்றுமாசு தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதிகளான அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோரை இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளனர்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் 343 கிலோமீட்டர் தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 28 இலட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், 46,845 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 104 கிலோமீட்டர் தூரத்திலான நான்காவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்படுள்ளது. 6 முனையங்களுடன் அமைக்கப்படும் இந்த வழித்தடத்துக்கான நிலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு அதற்கான தொகை உரிமையாளர்களுக்கு இன்னும் அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெல்லியில் வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்றுமாசு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதக்போது, “நான்காவது மெட்ரோ ரயில் வழித்தடம் தொடர்பான பணிகளை விரைவுப்படுத்தி செய்து முடிக்க மத்திய அரசும் டெல்லி அரசும் முன்வந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த பணிக்காக நில ஊர்ஜிதம் செய்த வகையில் 50:50 என்ற விகிதாசாரத்தில் 2,447.19 கோடி ரூபாயை டெல்லி அரசு உடனடியாக உரியவர்களுக்கு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிதி நெருக்கடியில் டெல்லி மெட்ரோ ரயில் சேவை தடுமாறும் நிலையில் அண்மையில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தால் டெல்லி மெட்ரோ ரயில் எவ்வாறு இலாபத்தில் இயங்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசிடம் கேள்வியெழுப்பி உள்ளனர்.

அத்துடன், இவ்வாறான திட்டத்தினால் ஏற்படும் இழப்பை டெல்லி அரசே ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள்  தெரிவித்தனர்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7